புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டாமென்று வலியுறுத்தும் ஹரியானா விவசாயிகள்.!

புதிய விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டாமென்று வலியுறுத்தும் ஹரியானா விவசாயிகள்.!

Update: 2020-12-14 13:11 GMT

இந்த ஆண்டு செப்டம்பரில் கொண்டுவந்த விவசாயிகளின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் விவசாய சட்டங்களைச் சீர்திருத்தம் செய்து, புதிய மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் மற்றும் அதனைத் திருப்பி பெறுமாறும்  டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஆனால், ஹரியானவை சேர்ந்த விவசாயிகள் 29 பேர் மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேற்று சந்தித்தனர். அவர்கள் புதிய விவசாய சட்டங்களுக்கு தங்கள் ஆதரவைத் தொடர்ந்து தருவதாகத் தெரிவித்தனர். 

மேலும் அவர்கள், தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்காக புதிய விவசாய மசோதாக்களைத் திரும்பப்பெற்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று தோமரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், "அரசாங்கம் இந்த சட்டங்களைத் திரும்பப்பெற்றால் நாங்களும் போராட்டம் நடத்துவோம். நாங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுகுறித்த அறிவிப்பை விடுத்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளனர். 

இந்த விவசாய குழுவானது ஹரியானவை சேர்ந்த பாரதிய கிசான் யூனியனின் மாநில தலைவர் குனி பிரகாஷ் தலைமை தாங்கினார். இவர் ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அதிகாரப்பூர்வ கடிதத்தை வழங்கியுள்ளார்.

தற்போது நடந்துவரும் போராட்டமானது விவசாயிகளால் முன்னிலைப் படுத்துவது அல்ல அவர்கள் இடதுசாரிகளால் வழிநடத்தப் படுகின்றனர் என்று பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார். மேலும், "இந்த போராட்டத்தில் அரசியல் சாயம் படிந்துள்ளது. இந்த மூன்று விவசாய சட்டங்களால் கட்டாயம் விவசாயிகள் பயன்பெறுவார்கள், அவர்களுக்கு நிச்சயம் சுதந்திரம் கிடைக்கும்," என்றும் அவர் கூறினார். 

இவ்வாறு தோமரை சந்தித்து புதிய விவசாய மசோதாக்களுக்கு ஆதரவாக தங்கள் ஆதரவைத் தெரிவிப்பது இது இரண்டாவது குழுவாகும். முன்னர் டிசம்பர் 7 முதல் குழு தோமரை சந்தித்து ஆதரவைத் தெரிவித்தது. இதன் மூலம் புதிய திட்டங்களின் முக்கியத்துவத்தையும் மற்றும் அது இருப்பதன் முக்கிய தேவையையும் உணர்த்துகின்றது. 

Similar News