உக்ரைனில் இருந்து மீண்டு வந்திருப்பது எனது மகன் இல்லை! பிரதமரின் மகன்: நெகிழ்ச்சி அடைந்த தந்தை!
உக்ரைன் நாட்டில் உள்ள சுமியில் சிக்கித் தவித்த தனது மகனை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்திருப்பதற்கு பிரதமர் மோடிக்கு உருக்கமான நன்றியை சஞ்சய் பண்டிதா என்ற தந்தை கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு வந்தது. அதில் குறிப்பிட்ட நகரங்களில் போர் தீவிரம் அடைந்திருப்பதால் அவர்களை மீட்பதில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதனால் பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர்களிடம் தொலைபேசி வாயிலாக நிலவரங்களை கூறினார். இதனால் இரண்டு தரப்பும் போரை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இதனால் உக்ரைனில் இருந்து சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர்கள் மீட்கப்பட்டனர்.
#WATCH A tearful Sanjay Pandita from Srinagar, Kashmir welcomes his son Dhruv on his return from Sumy, #Ukraine, says, "I want to say that it's Modiji's son who has returned, not my son. We had no hopes given the circumstances in Sumy. I am thankful to GoI for evacuating my son." pic.twitter.com/ygqOVk5PGm
— ANI (@ANI) March 11, 2022
இந்நிலையில், வடகிழக்கு உக்ரைனில் உள்ள சுமி என்ற நகரத்தில் உள்ள இந்தியர்கள் 647 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டன. அப்போது அவர்களை வரவேற்க பெற்றோர்கள் திரண்டிருந்தனர். மாணவர்கள் வந்த உடன் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்றனர். அதே போன்று காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பண்டிதா என்பவரும் தனது மகனை வரவேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவ; உக்ரைனில் இருந்து திரும்ப வந்திருப்பது எனது மகன் இல்லை, பிரதமர் மோடியின் மகன் என்றே கூறலாம். சுமியில் மிகப்பெரிய போர் பதற்றம் நிலவியது. மீண்டும் தனது மகன் துருவ் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால் தற்போது தனது மகனை மத்திய அரசு பத்திரமாக மீட்டுள்ளது. இதற்காக கண்ணீருடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Source, Image Courtesy:Twiter