வடமாநிலங்களில் கனமழை. கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு !
உத்தரபிரதேசம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளிப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சாலைகள் மட்டுமின்றி குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
உத்தரபிரதேசம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கங்கை, யமுனை ஆறுகளில் வெள்ளிப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கங்கையில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பல ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கங்கை கரையை ஒட்டியுள்ள பல ஊர்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Source: Dinakaran
Image Courtesy: ANI
https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=695970