கேரளாவில் கனமழை எதிரொலி: இடுக்கி அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கேரளா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2021-10-18 12:17 GMT

கேரளா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் இந்தியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணைக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணை நிரம்பி வருகிறது. மூன்று நாட்களுக்கு முன் இடுக்கி அணை நீர்மட்டம் 2,391.36 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அணைக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ப்ளு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடுக்கியில் தொடரும் மழையால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,450 கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது நீர்மட்டம் 2,397 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் அணைக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சௌர்ஸ் Puthiyathalamurai

Image Courtesy: The Print


Tags:    

Similar News