காசியாபாத்தில் முன்னால் ஷியா வக்போர்டு தலைவர், முறைப்படி இந்து மதத்தை ஏற்கிறார் !

Update: 2021-12-06 09:04 GMT

முன்னாள் ஷியா வக்போர்டு  தலைவர்  வாசீம் ரிஸ்வி, இன்று காசியாபாத்தில் இந்துக் கோயிலில் முறைப்படி இந்து மதத்தை தழுவ இருக்கிறார். 

காசியாபாத்  கோயிலொன்றில், இந்து மத குரு யாதி நர்சிங் ஆனந்தகிரி, வாசிம் ரிஸ்வியை இந்து மதத்தை தழுவுவதர்கான   முறைப்படி சடங்கு முறைகளை செய்ய இருக்கிறார். 


வாசிம் ரிஸ்வி சமீபத்தில் தன் இறப்பு குறித்து பேசிய கருத்துக்கள்  சர்ச்சையை ஏற்படுத்தியது, அவர் தான் இறந்த பிறகு தன் உடல் புதைக்கக் கூடாது என்றும், மாறாக இந்து மத முறைப்படி உயிரற்ற தன் உடல் எரியூட்டப்பட வேண்டும் என்று தன் கருத்தை தெரிவித்தார். மேலும் ரிஸ்வி  "என் உயிரற்ற உடலை, நர்சிங் ஆனந்தகிரி தான் கொல்லி வைக்க வேண்டும் " என்று தன் விருப்பத்தையும்  பதிவுசெய்துள்ளார்.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இஸ்லாம் மதத்தின் வழிபாட்டு புனித நூலான குரானில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட இருபத்தி ஆறு வசனங்கள், தீவிரவாதத்தை ஆதரிப்பதாக  அவர்  கருதி  அதனை குரானில் இருந்து நீக்க வேண்டும் என்று வாசிம்  ரிஸ்வி வழக்கு தொடுத்திருந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தும், மேலும் அவருக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, வாசிம்  ரிஸ்வி காணொளி ஒன்றில் பகிரங்க கருத்துக்களை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது : நான் செய்த மிகப்பெரிய குற்றம், உச்சநீதிமன்றத்தில் குரானில் இடம்பெற்றுள்ள 26 வசனங்களை எதிர்த்து நான் வழக்குத் தொடர்ந்தது தான். இதனால் இஸ்லாமியர்கள் என்னைக் கொல்லத் துடிக்கிறார்கள். நிச்சயமாக தெரியும் அவர்களின் சுடுகாட்டில் எனது உடலுக்கு இடமில்லை என்று.

முன்னாள் ஷியா வக்போர்டு தலைவர் இப்படி வெளிப்படையாக இந்து மதத்தை முறைப்படி தழுவுவது, நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

abp Live

Tags:    

Similar News