கடும் வெப்பநிலையை எதிர்கொள்ள பள்ளிகளில் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்!

கோடைக் காலத்தில் வெப்பநிலையை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகளைப் பிரதமர் அறிவுறுத்தினார்.

Update: 2023-03-08 01:02 GMT

வரவிருக்கும் கோடைக் காலத்தில் வெப்பநிலையை எதிர் கொள்வதற்கான தயார்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், அவரது தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களுக்கான காலநிலை முன்கணிப்பு மற்றும் இயல்பான மழைப்பொழிவு குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறையால் பிரதமருக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. ரபிப் பருவப் பயிர்களுக்கான காலநிலைத் தாக்கம் மற்றும் முக்கியப் பயிர்களின் விளைச்சல் குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.


பாசன நீர் விநியோகம், தீவனம், குடிநீர் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அவசர காலங்களில் மாநிலங்களின் தயார்நிலை மற்றும் தேவைப்படும் பொருட்களுக்கான மருத்துவமனை உள்கட்டமைப்பு பற்றிய ஆய்வு குறித்தும் பிரதமரிடம் விவரிக்கப்பட்டது. வெப்பநிலை தொடர்பாக ஏற்படும் பேரிடர் தயார்நிலை, தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் பிரதமருக்கு விளக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்கள், மருத்துவ நிபுணர்கள், நகர மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள், தீயணைப்பு வீரர்கள் போன்ற பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினருக்கு தனித்தனியே விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு தயாரிப்பு நிலையை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். கடும் வெப்பநிலையை எதிர்கொள்வது தொடர்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பலவகை ஊடகங்கள் மூலம் எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News