கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்.. பி.எம்.கேர்ஸ் நிதி பெற அடையாளம் காண மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா வைரஸ் தொற்றால் 30 ஆயிரத்து 71 குழந்தைகள் அனாதைகளாக ஆகியுள்ளதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது. அதே போன்று கொரோனா 2வது அலையின்போது கடந்த ஏப்ரல் முதல் மே 28ம் தேதிக்குள் 645 குழந்தைகள், பெற்றோரை இழந்துள்ளதாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

Update: 2021-07-26 01:24 GMT

மேலும், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி கடந்த மே மாதம் வெளியிட்டிருந்தார். அப்போது குழந்தைகள் 23 வயதை கடந்த பின்னர் பி.எம்.கேர்ஸ் நிதியத்தின் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி படிப்பதற்கு தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் இன்டிவர் பாண்டே கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பிஎம்.கேர்ஸ் நிதியத்தில் இருந்து உதவி பெறுவதற்கு தகுதி பெறுகின்றனர். அது போன்ற குழந்தைகளை அடையாளம் காணுவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட வேண்டும்.

குழந்தைகளின் விவரங்களை பதிவு செய்வதற்காக ஒரு பிரத்யேக வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளம் மூலம் உடனடியாக உதவி பெறுவதற்கு வழி பிறக்கும். மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் விவரங்களை முடிவு செய்வதற்கு இறுதியானவர் ஆவார். போலீஸ் மற்றும் சைல்டுலைன் மூலமாக குழந்தைகளின் அடையாளம் காண வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News