சிலிண்டர் புக்செய்தால் 35வது நிமிடத்தில் வீடு தேடி வரும்.. தட்கல் முறை அறிமுகம்.!

சிலிண்டர் புக்செய்தால் 35வது நிமிடத்தில் வீடு தேடி வரும்.. தட்கல் முறை அறிமுகம்.!

Update: 2021-01-13 14:11 GMT

கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்தால் முன்பு எல்லாம் கிட்டத்தட்ட 2 முதல் 3 நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட ஆகும். ஆனால் தற்போது அதனை படிப்படியாக குறைத்து ஒரு நாள் என்று ஆயில் நிறுவனம் மாற்றியது.

தற்போது அதனை இன்னும் எளிதாக்க திட்டம் போட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று ஒரு 8 மணிக்கு சிலிண்டர் முன்பதிவு செய்தோம் என்றால் 8.45 மணிக்கு சிலிண்டர் வீட்டுக்கு வந்துடும் என்ற முறையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டரை முன்பதிவு செய்த அதே நாளில் சிலிண்டர்களை வழங்கும் புதிய தட்கல் சேவையை பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தட்கல் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்த 30 முதல் 45 நிமிடங்களில் சிலிண்டர் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும். இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு வெற்றி பெறும் பட்சத்தில் அனைவருக்கும் மிக எளிதில் சிலிண்டர் கிடைத்துவிடும். இதனால் மக்களுக்கும் சிரமம் குறையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.

Similar News