இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மின் விநியோகம்: மத்திய மின்துறை அமைச்சகம் தகவல்!

Update: 2022-04-27 12:17 GMT

நிலக்கரி சரியாக கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாட்டில் ஒரு சில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிகமான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசின் நிர்வாகமே காரணம் என்று எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நேற்று (ஏப்ரல் 26) மதியம் முதல் நாடு முழுவதும் சுமார் 201 புள்ளி பூஜ்யம் ஆறு, ஆறு ஜிகாவாட் அளவிற்கு மின்விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 200 ஜிகாவாட் மின்சாரம் விநியோகிகப்பட்டதை விட தற்போது புதிய அளவு எட்டியுள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்தால் மட்டுமே மின்தேவையும் அதிகரிக்கும். எரிசக்தி தேவை 8.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதே சமயம் மே, ஜூன் மாதங்களில் மட்டும் 215 முதல் 220 ஜிகாவாட் வரை இருக்கும். தடையில்லாமல் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு மத்திய அரசு தொடர்ந்து சேவை செய்து வருகிறது. இவ்வாறு மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News