ஜவுளித் துறையில் 7.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் - தமிழகத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் மத்திய அரசின் திட்டம் !
Help create additional employment of over 7.5 lakh people directly and several lakhs more for supporting activities
ஐந்து ஆண்டுகளில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ஜவுளித் துறையில் புதிதாக ரூ. 19,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளும், ஒட்டுமொத்த உற்பத்தி சுமார் ரூ. 3 லட்சம் கோடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தத் துறையில் கூடுதலாக 7.5 லட்சம் வேலைவாய்ப்புகளும், இதனுடன் சம்மந்தப்பட்ட பணிகளில் லட்சக்கணக்கான வாய்ப்புகளும் உருவாகும். ஜவுளித் துறையில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபடுவதால் இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளித்து, பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பையும் அதிகரிக்கும்.
ஜவுளித்துறைக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணிவகைகளின் உற்பத்தியும், ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த துறைகளும் ஊக்குவிக்கப்படும். இந்தப் பிரிவுகளில் புதிதாக முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பருத்தி மற்றும் பிற இயற்கை நார் அடிப்படையிலான ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு இணங்க வளர்ந்துவரும் மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல் பிரிவுக்கு இது ஒரு பெரிய உந்துசக்தியை அளிக்கும். உலகளாவிய ஜவுளி வர்த்தகத்தில் இந்தியா அதன் வரலாற்று மேலாதிக்க நிலையை மீண்டும் பெற இது உதவிகரமாக இருக்கும்.
உள்கட்டமைப்பு, தண்ணீர், சுகாதாரம் மற்றும் துப்புரவு, பாதுகாப்பு, ராணுவம், வாகனங்கள், விமானம் உள்ளிட்ட பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி பிரிவு என்ற புதிய ஜவுளி, பொருளாதாரத்தின் இது போன்ற துறைகளில் முறையான பயன்பாட்டை மேம்படுத்தும்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தேசிய தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி இயக்கத்தை அரசு கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிரிவில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.