தமிழகத்தில் ராணுவ தளவாட தொழில்களில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு.!
தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் ராணுவ தளவாட தொழில்களில் முதலீடு செய்வதற்கு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் ராணுவ தளவாட தொழில்களில் முதலீடு செய்வதற்கு ஸ்வீடன் நிறுவனங்களுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
பாதுகாப்பு குறித்த தளவாட தொழில் இந்தியா, ஸ்வீடன் ஒத்துழைப்பு பற்றிய இணைய கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு தளவாட கொள்முதல் நடைமுறைகள், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா மாறுவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் தனியாகவோ, அல்லது இந்திய நிறுவனங்களுடன் இணைந்து, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முதலீடு செய்யலாம். இவ்வாறு அவர் பேசினார்.