கனவை நிஜமாக்க மிகப்பெரிய அளவில் இந்தியர்கள் சிந்தித்து உழைக்கின்றனர்: பிரதமர் மோடி பேச்சு!
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகின்றார். இதில் பல்வேறு தகவல்களை நாட்டு மக்களிடம் பரிமாறி வருவார்.
அந்த வகையில் இன்று 87வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது: பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாக பயணம் செய்து வருகிறது. கனவை நனவாக்க மிகப்பெரிய அளவில் இந்தியர்கள் சிந்தித்து அதற்காக உழைத்து வருகின்றனர்.
அதாவது 400 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய இந்திய ஏற்றுமதி நம்மை பெருமைப்பட வைத்துள்ளது. இது நாட்டின் ஆக்கத்தையும், திறனையும் குறிக்கிறது.மேலும், இந்தியாவில் இருந்து புதிய தயாரிப்புகள் புதிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் நமது இந்திய தயாரிப்பு பொருட்களே அதிகளவு கிடைக்கிறது. நமது விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Source, Image Courtesy: Daily Thanthi