G20 தலைமை இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு: பிரதமரின் அறிவுரை என்ன?

ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பாக பிரதமர் மோடி பார்க்கிறார்.

Update: 2022-11-28 02:16 GMT

ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பு உலக நன்மைகளில் கவனம் செலுத்த இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஜி-20 தலைமை பொறுப்பு தற்போது இந்தோனேசியாவிடம் இருந்து இந்தியாவசம் வர இருக்கிறது. டிசம்பர் 1 முதல் இந்தியா ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இது பற்றி தெரிவித்து இருக்கிறார்.


நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு கொடுக்கும் திறன் இந்தியாவிற்கு இருக்கிறது என்று கூறுகிறார். மேலும் இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பினை டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஏற்றுக் கொள்ள உள்ளது. இது உலகில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்க இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு எனவும் அவர் பேசுகிறார். ஜி 20 அமைப்பின் சுமார் 20 நாடுகள் முன்னணியில் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிற்கு அதனுடைய தலைமை பொறுப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜி20 மாநாட்டின் தலைமை ஏற்கும் பொறுப்பு இந்தியாவிற்கு கிடைத்து இருக்கிறது.


இந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், துருக்கி போன்ற நாடுகளும் இடம் பெற்று இருக்கிறது. எனவே இத்தகைய நாடுகளை கொண்ட G20 மாநாட்டின் தலைமை பொறுப்பு தற்போது இந்தியாவிற்கு கிடைத்து இருக்கிறது என்றால், அதை நாம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News