போக்குவரத்தை முற்றிலும் மின் வாகனங்களாக மாற்ற இந்தியாவிற்கு தேவைப்படும் நிதி எவ்வளவு தெரியுமா?

மின்வாகன பயன்பாட்டை இந்தியா முழுவதும் கொண்டுவர சுமார் 23 லட்சம் கோடி தேவைப்படுவதாக உலக பொருளாதார மன்றம் தகவல்.

Update: 2022-12-04 03:18 GMT

இந்தியாவில் முழுமையான அளவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர மின் வாகனங்களை இந்தியா முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சுமார் 23 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்று உலக பொருளாதார மற்றும் கருத்து தெரிவித்திருக்கிறது. இது நிதி அயோக் உடன் இணைந்து உலக பொருளாதார மன்றம் இந்தியாவின் மின்சார வாகன பயன்பாட்டின் நிலவரம் குறித்து தனது அறிக்கையை தற்போது வெளியிட்டு இருக்கிறது. இந்த அழுக்கையில் இந்தியா முழுவதும் இரண்டு மற்றும் மூன்று சக்கர மீன் வாகனங்களை மாற்ற எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதை இந்த அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.


இந்தியாவிற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களில் 80 சதவீதத்தில் உள்ள வாகனங்கள் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆகும். 26.4 கோடி இரண்டு சக்கர வாகனங்கள், 60 லட்சம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் இந்தியாவில் உள்ளன. இதில் சராசரியாக இரண்டு சக்கர வாகனத்தின் மதிப்பு 81 ஆயிரம் எனவும், மூன்று சக்கர வாகனத்தின் மதிப்பு 2.8 லட்சம் எனவும் கணக்கில் கொள்லாம்.


இந்த 27 கோடி வாகனங்களில் முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கு இந்தியாவிற்கு மொத்தமாக 23 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தற்சமயம் 45 நிறுவனங்கள் இரண்டு மற்றும் மூன்று சக்கரதங்களாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் மின்வாகனங்களின் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் எனில் அது தொடர்பாக நீண்ட கால அடிப்படையில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News