முதலீட்டாளர்கள் விரும்பும் இந்தியா... வேகமாக வளர்ந்து வருவதற்கு இதுதான் சீக்ரெட்!
ஏராளமான வாய்ப்புகள் இந்தியாவை உலகின் மிகவும் நம்பகமான வணிக முதலீட்டு இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.
ஏராளமான வாய்ப்புகள் இந்தியாவை உலகின் மிகவும் நம்பகமான வணிக முதலீட்டு இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன என ரோமில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வணிகக் கலந்தாய்வு அமர்வில் பியூஷ் கோயல் எடுத்து கூறினார். இத்தாலியின் ரோம் நகரில் தலைமை நிர்வாக அதிகாரிகளின் வணிகக் கலந்துரையாடல் அமர்வில் பேசிய மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவின் ஏராளமான வாய்ப்புகள் எவ்வாறு உலகின் நம்பகமான வணிகம் மற்றும் முதலீட்டு இடமாக அதனை மாற்றியிருக்கின்றன? என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையற்ற வர்ததக சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதோடு இந்தியா உலகளாவிய தொடர்புகளைக் கொண்ட ஒரு திறந்த நாடு என்று அவர் கூறினார். அண்மையில் மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கு உத்தியில் ஏராளமான புதிய வாய்ப்புகள் இருப்பதால், இந்தியா-இத்தாலி பங்களிப்பில் அதிக இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார். கடந்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் இந்தியா 55% வளர்ச்சி கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவில் சுமார் 700 இத்தாலிய நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், இந்தியாவில் இருப்பதற்கு இதுவே உகந்த நேரம் என்றும் அவர் தெரிவித்தார். எதிகாலத்திற்கேற்ற மாற்றங்களுடன் மிகவும் வலுவான மற்றும் முன்னோக்கிய கொள்கைக் கட்டமைப்பை இந்தியா வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இத்தாலி துணைப் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான திரு. அன்டோனியோ தஜானியும் இந்தக் கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்று தொழிலதிபர்களிடையே உரையாற்றினார். குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் தொழில்துறையை ஆதரிப்பதன் மூலம் இரு நாடுகளிலும் அடுத்த தலைமுறைக்கு சிறந்த நிலையை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று தஜானி தெரிவித்தார்.
Input & Image courtesy: News