விண்வெளி துறையில் இந்தியாவின் பிரம்மாண்டமான சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்!

விண்வெளி துறையில் இந்தியாவின் சாதனைகள் பல மடங்கு உயர்ந்த நிற்கிறது.

Update: 2022-10-31 11:00 GMT

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று பேசிய அவர், இந்திய தனது பாரம்பரிய அனுபவங்களை நவீன அறிவியலுடன் இணைந்து கொண்டிருக்கிறது. எனவே நாம் நம் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறோம். வளர்ந்த நாடுகளை காட்டிலும் நாம் சூரிய மின் சக்தியை எதிர்காலமாக பார்க்கிறோம். இது நாட்டின் ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிறது. நாட்டின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக குஜராத்தின் மோதோரா மாறி வருகிறது.


இந்தியாவின் கவனம் விண்வெளி பக்கம்:

இப்போது இந்தியாவின் கவனம் விண்வெளி பக்கமாக திரும்பி இருக்கிறது. நம் நாடு சூரிய மின்சக்தி துறையைப் போன்று விண்வெளி துறையிலும் அற்புதமான பல புத்தகங்களை செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் சாதனைகளைக் கண்டு ஒத்துமொட்ட உலகமும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் தருணம். இது சில நாட்களுக்கு முன்பாக ஒரே நாளில் விண்வெளியில் 36 செயற்கைக்கோள்களை அதுவும் வெளிநாட்டின் செயற்கை கோள்களை இந்தியா நிலை நிறுத்தி உள்ளது.


இந்த சாதனை தீபாவளி முன்னாள் நிகழ்த்தப்பட்டு இருப்பதன் காரணமாக இது நாட்டின் இளைஞர்களுக்கான தீபாவளி பரிசாகும். செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை குட் செட்டில் இருந்து ரோஹிமா வரை ஒட்டுமொத்த நாட்டின் டிஜிட்டல் தொடர்பு மேலும் வலுப்படுத்தப்படும். கடைக்கோடி பகுதிகளில் கூட நாட்டின் எஞ்சிய பகுதிகளிலும் எளிதில் இணைக்கப்பட்டு விடும். எனவே இது இந்தியாவின் பிரமாண்டமான சாதனையாக பார்க்கப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News