ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிய நெடுஞ்சாலையை கட்டமைக்கும் சீனா - பதிலடி கொடுக்கும் இந்தியா!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிய நெடுஞ்சாலையை கட்டமைக்கும் சீனா - பதிலடி கொடுக்கும் இந்தியா!

Update: 2021-01-18 17:30 GMT
800 கிலோமீட்டர் காரகோரம் நெடுஞ்சாலையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்கிட் பல்டிஸ்தானில் உள்ள ஆஸ்டோருடன் இணைக்கும் ஒரு சாலையை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது. இது லடாக் மீது மேலும் அழுத்தம் கொடுக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

உய்க்குர் கலாச்சாரத்துடன் தொடர்புடைய, பண்டைய புத்த நகரத்தை, காரகோரம் நெடுஞ்சாலை வழியாக ஆஸ்டோருடன் இணைக்க சீனா விரும்புகிறது என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. 33 மீட்டர் அகலமுள்ள சாலை அமைக்கப்பட்டதும், லடாக்கில் இந்திய நிலைகளை அச்சுறுத்தும் வாய்ப்பைத் திறந்து சீனா கனரக பீரங்கிகளை கில்கிட் பல்டிஸ்தானில் செலுத்த முடியும்.

Caption

ஆஸ்டோர் மாவட்டம் பாகிஸ்தானின் ஒரு பிரிவு தலைமையகமான ஸ்கார்டுவுக்கு மேற்கே உள்ளது. இது லடாக்கிலிருந்து வெகு தொலைவில் இல்லை, அங்கு சீனாவும் இந்தியாவும் நீட்டிக்கப்பட்ட இராணுவ மோதலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்டோர், கில்கிட் பல்டிஸ்தானின் 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்நிலையில் தற்போது கட்டமைக்கப்படும் 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையுடன் ஈட்காவை இணைக்கிறது.

இந்தியா இதை தடுக்காவிட்டால் புதிய சாலையை நிர்மாணிப்பது சீனாவுக்கும், காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக இரண்டு முன்னணி யுத்தத்தை முன்னெடுப்பதற்கான பாகிஸ்தானின் திறனையும் வலுப்படுத்தும் விதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா தனது மிகப்பெரிய நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக நடவடிக்கைகளில் வேகம் காட்டி வருகிறது.

Caption

இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து சீனாவைத் தாக்க குறிப்பிடத்தக்க மைல்கற்களைக் கடந்துவிட்டது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வழியாகச் செல்லும் சீன வணிகக் கப்பல்கள் பயன்படுத்தும் முக்கிய கப்பல் பாதைகளில் இதை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டு செயலாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா பிஷ்-ஹூக் எனப்படும் கடலுக்கடியில் உள்ள சென்சார்கள் சங்கிலியை இணைத்துள்ளது. இது முன்னர் பசிபிக் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் இயக்கத்தைக் கண்காணிக்க ஜப்பான் மற்றும் அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்டது. உலகின் மிக முக்கியமான கடற்படை மற்றும் வர்த்தகப் புள்ளிகளில் ஒன்றாக அந்தமான் நிக்கோபார் உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

Similar News