100 கோடி தடுப்பூசி செலுத்திய சாதனை படைத்த இந்தியா: மின்னொளியில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள்!

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-10-22 01:50 GMT

இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளது. இது உலக அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. எந்த நாடும் இதுவரை இவ்வளவு குறுகிய காலத்தில் 100 கோடி தடுப்பூசியை போட்டதில்லை. இந்த சாதனையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சாதித்துள்ளது.


மேலும், இந்தியாவின் சாதனையை உலக சுகாதார நிறுவனம் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள தொன்மையான வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள் இந்திய நாட்டின் மூவர்ண தேசிய கொடியின் ஒளி வெள்ளத்தில் ஜொலிக்க செய்துள்ளது. 100 கோடி சாதனையை போற்றும் வகையில் இதனை செய்துள்ளாக கூறப்பட்டுள்ளது.


அதில் செங்கோட்டை, குதுப் மினார், ஹுமாயுனின் கல்லறை, துக்ளகாபாத் கோட்டை, ஹம்பியில் உள்ள ராமப்பா கோவில், பழங்கால லே அரண்மனை; கொல்கத்தாவில் நாணய கட்டிடம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோவில்கள் மற்றும் ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, தமிழகத்தில் மாமல்லபுரம் ஐந்து ரத கோவில் மாதிரியான புராதன சிறப்புமிக்க கட்டிடங்கள் அனைத்தும் மின்னொளியில் ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: ANI

Tags:    

Similar News