2 டன் மருந்து பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிய இந்தியா!
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த நிலையில் அங்கு உணவு மற்றும் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் தினந்தோறும் சாப்பிடுவதற்கு கூட உணவின்றி இருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தாலிபான்களின் அரசை இன்றுவரை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இதனால் அந்நாட்டில் ஆட்சி நிர்வாகம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. தற்போது கொரோனா தொற்றால் உலக நாடுகள் தத்தளித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தானும் விதிவிலக்கல்ல. அங்கேயும் மருந்து பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தினந்தோறும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கான் மக்களுக்கு மனிதயே அடிப்படையில் இந்திய அரசு மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை அனுப்பியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் 1.6 டன் மருந்துப் பொருட்கள், ஜனவரி 1ம் தேதி 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து மூன்றாவது கட்டமாக 2 டன் உயிர்காக்கும் மருந்துப் பொருட்களையும் அனுப்பியுள்ளது.
Source, Image Courtesy: Maalaimalar