இந்தியாவின் முயற்சியில் முதல் விமானம் தாங்கி கப்பல்: சோதனை ஓட்டம் வெற்றி !

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பல் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Update: 2021-08-05 13:32 GMT

 தற்போது மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது குறிப்பாக ஆத்மநிர்பார் திட்டத்தின் மூலம் உள்நாட்டில் அனைத்து பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையான வசதிகளையும் மற்றும் நவீன கருவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகின்றது அந்த வகையில் தற்போது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் முறையான விமானம் தாங்கி கப்பல் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான INS விக்ராந்த்தை கடலில் செலுத்தி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.


இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பல்தான் INS விக்ராந்த் கப்பல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் இந்திய கடற்படைக்காக கொச்சி சிப்யார்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கப்பலுக்கான வடிவமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கப்பலின் அடிப்பாகம் 2009 பிப்ரவரி மாதத்தில் முழுமையாக அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் மிக் வகையை சார்ந்த 24 போர் விமானங்களை நிறுத்தும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டது என்பது இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சமாகும். 


இந்த நிலையில் முதன்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி கப்பல்தான் INS விக்ராந்த் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது. 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி இந்த கப்பலை அடுத்த ஆண்டு கடற்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுவதும் மூலமாக இந்திய கப்பற்படையின் பணி மென்மேலும் அதிகரிக்கும் என்றும் கூறலாம். 

Input: https://m.timesofindia.com/india/indias-first-indigenous-aircraft-carrier-to-be-named-ins-vikrant-finally-begins-sea-trials/amp_articleshow/85031100.cms

Image courtesy: times of India 


Tags:    

Similar News