இந்தியா, ரஷ்யா இடையே ராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லியில் சந்திப்பு நடைபெற உள்ளது.

Update: 2021-12-06 13:25 GMT

பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லியில் சந்திப்பு நடைபெற உள்ளது.


இதற்கு முன்னர் இரண்டு நாட்டு ராணுவ அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு புதிய ஒப்பந்தகளுக்கு கையொப்பமிட்டனர். அதன்படி பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தகள் கையெழுத்திடப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரண்டு நாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கு இடையேயான 2+2 என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதற்காக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர் கேய் லால்ரோவ் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு நேற்று (டிசம்பர் 5) இரவே டெல்லிக்கு வந்து விட்டனர். அதே போன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர்களை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.


இதில் இந்தியா, ரஷ்யா இடையிலான ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தகள் கையெழுத்தானது. ராணுவத்திற்கு தேவையான ரஷ்ய தயாரிப்பான மிகவும் நவீன முறையிலான ஏ.கே.203 தானியங்கி துப்பாக்கிகளை இந்தியா வாங்குவதற்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter


Tags:    

Similar News