பயங்கரவாதத்தை நியாயப்படுத்தாதீர்கள்: முஸ்லீம் அமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம்!
மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியதற்கான வழக்கில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து என்.ஐ.ஏ. நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே யாசின் மாலிக்குக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றி முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பு எனும் முஸ்லிம் அமைப்பின் முக்கிய பிரிவான சுதந்திரமான நிரந்த மனித உரிமைகள் ஆணைக்குழு விமர்சனம் செய்தது.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், அரிந்தம் பாக்சி, யாசின் மாலிக்கின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. யாசின் மாலிக் வழக்கில் வழங்கப்பட்ட தீர்பு குறித்து முஸ்லிம் ஒத்துழைப்பு அமைப்பின் கருத்துக்களை இந்தியா ஏற்காது. இந்த அமைப்பு இதன் வாயிலாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவை காட்டுகிறது. பயங்கரவாதத்தை எவ்வகையில் வந்தாலும் அதனை நியாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Vikatan