அரிசி, கோதுமையை பின்னுக்கு தள்ளி பால் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா முதலிடம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2022-04-20 13:40 GMT

உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை விட அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் புதிய பால் பண்மை மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் 19) திறந்து வைத்தார்.

அதன் பின்னர் அவர் பேசியதாவது: உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்தியா வருடத்திற்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாலை உற்பத்தி செய்கிறது. இதனால் கிராமங்களின் பொருளாதார அமைப்பு இதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதே சமயம் கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:The Statesman

Tags:    

Similar News