நீரிழிவு சிகிச்சைக்கு தொழில்நுட்ப சிகிச்சை மையம்.. இந்தியாவிடம் உலக நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்பு..

தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நீரிழிவு சிகிச்சைக்கு இந்தியா தலைமை தாங்க தயாராக உள்ளது.

Update: 2023-05-08 03:56 GMT

தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நீரிழிவு நோய்க்கான சிகிச்சையை வழிநடத்த இந்தியா தயாராக உள்ளதென மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். "நீரிழிவு தொழில்நுட்பம் மற்றும் சிகிச்சை முறைகள் 2023" என்ற 3-நாள் சர்வதேச மாநாட்டில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இங்கு உரையாற்றியபோது, புகழ்பெற்ற நீரிழிவு நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கொரோனாவை வெற்றிகரமாகக் கையாண்ட பிறகு, இந்தியாவிடம் சுகாதாரத் துறையில் பிற நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.


தொழில்நுட்பம் மற்றும் மனித வளத்தில் மற்ற நாடுகளை விட நாம் மிகவும் முன்னேறி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் ஜிதேந்திர சிங் நீரிழிவுத் துறை வல்லுநர் ஆவார். குறிப்பாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை தனிப்பட்ட முறையில் ஊக்குவிப்பதால், இந்தியா தொழில்நுட்பத்துறையில் வேகமாக வளர்ச்சி பெற்று வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன் நாட்டில் சுமார் 350 ஸ்டார்ட்-அப்கள் இருந்த நிலையில், தற்போது ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 90,000க்கும் மேல் உயர்ந்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.


உலகின் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவித்ததால், கிட்டத்தட்ட மூன்றாண்டுகளில் விண்வெளித் துறையில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப்கள் உருவாகியுள்ளதாகவும், 2014-ம் ஆண்டில் சுமார் 50-ஆக இருந்த பயோடெக் ஸ்டார்ட்-அப்கள் எண்ணிக்கை இன்று 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News