முதலீட்டாளருக்கு உகந்த நாடாக இந்திய உள்ளது: பிரதமர் மோடி!

ரிசர்வ் வங்கியின் இரண்டு திட்டங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக துவக்கி வைத்து பேசியதாவது: கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டின் வளர்ச்சிக்கு நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் ஏராளமான பணிகளை செய்துள்ளது.

Update: 2021-11-12 08:54 GMT

உலகளவில் முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா தொடர்ந்து இருந்து வரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் இரண்டு திட்டங்களை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக துவக்கி வைத்து பேசியதாவது: கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டின் வளர்ச்சிக்கு நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் ஏராளமான பணிகளை செய்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் புதிய திட்டங்களான ஆர்.பி.ஐ. மற்றும் சிறு முதலீட்டாளர் திட்டம் ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம் ஆகியவை நாட்டின் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். அவர்களுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குவதும் மட்டுமின்றி சந்தைகளை எளிதாக அணுகுவதற்கான வசதியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும், ஆர்.பி.ஐ. சிறு முதலீட்டாளர் திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள சிறு முதலீட்டாளர்கள், தங்களின் நிதி பாதுகாப்பிற்காக அரசுடைய பாண்ட் மார்க்கெட்டில் பங்கேற்க முடியும். இந்த இரண்டு திட்டங்களும் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலமாக தன்னிறைவு இந்தியா திட்டத்திற்கும் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கும் முக்கியமாகும். மேலும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களுக்கு உகந்த நாடாக இந்தியா இருக்கும் என்றார்.

Source: Twitter

Image Courtesy: ANI


Tags:    

Similar News