ஆப்கானிஸ்தானில் தூதரகம் மூடப்பட்டு அதிகாரிகள் இந்தியா அழைத்து வரப்பட்டனர் !
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டில் உள்ள தூதரங்களை அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மூடி வருகிறது.
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டில் உள்ள தூதரங்களை அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மூடி வருகிறது.
அதே போன்று ஊழியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் பலர் தங்களின் நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் பலரும் வெளிநாடுகளுக்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் சோகமாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவும் தனது தூதரகத்தை மூடிவிட்டு, அனைத்து ஊழியர்களையும் பத்திரமாக வெளியேற்றும் முயற்சியில் இறங்கியது. அதன்படி இந்திய தூதர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் இந்திய விமானப்படையை சேர்ந்த சி17 சிறப்பு விமானம் மூலமாக இன்று 120 தூதரக அதிகாரிகளுடன் குஜராத் மாநிலம், ஜாம்நகரில் வந்தடைந்தது. ஏற்கனவே 129 பேர் அழைத்து வரப்பட்ட நிலையில், தற்போது 120 பேர் வந்துள்ளனர்.
மேலும், பல இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்கும் முயற்சியில் இந்திய விமானப்படை இறங்கியுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: Twiter
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/17120140/2931286/Tamil-News-Indian-Air-Force-C-17-aircraft-that-took.vpf