இந்திய விமான படை என்றாலே தைரியம், விடாமுயற்சி.. விமானபடை தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!
இந்திய விமான படை கடந்த 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.;
இந்திய விமான படை கடந்த 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 89வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி டெல்லியில் உள்ள காஜியாபாத் பகுதியில் அமைந்த ஹிண்டன் விமான படை நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ம் நாள் இந்திய விமான படை தினம் மிகச்சிறப்புடன் கொண்டாடப்படும். இதில் விமான படையின் அணிவகுப்புகள் மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தளபதிகள் இன்று மரியாதை செலுத்துகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி இந்திய விமான படை தினத்திற்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இந்திய விமான படை என்றாலே தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறை என்ற பொருள்படும். சவாலான நேரங்களில் மனிதநேய உணர்வுடன் செயல்பட்டு நாட்டை காக்கின்ற பணியில் தங்களை அடையாளம் படுத்தியுள்ளனர்.
இந்த தினத்தில் நமது விமான படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு என்னுடைய வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Prime Minister Modi Twiter