நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்து: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி விளக்கம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி மனோஜ் நரவானே, விபத்து நடந்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார். விபத்து பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் என்ன மாதிரியான மீட்புப்பணிகள் நடைபெறுவது உள்ளிட்டவைகளும் இடம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

Update: 2021-12-08 12:31 GMT

இந்திய ராணுவத்தின் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே தமிழக அரசுக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் கீழே விழுந்து எரிந்துள்ளது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வரை இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ தளபதி மனோஜ் நரவானே, விபத்து நடந்தது பற்றி விளக்கம் அளித்துள்ளார். விபத்து பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் என்ன மாதிரியான மீட்புப்பணிகள் நடைபெறுவது உள்ளிட்டவைகளும் இடம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

மேலும், டெல்லியில் உள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டிற்கு நரவானே சென்று மகளிடம் நடந்தவற்றை விளக்கி கூறியுள்ளார். மீட்பு பணிகள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: India Today


Tags:    

Similar News