விண்வெளி பொருளாதாரத்தில் கலக்கும் இந்தியா... பிரதமர் மோடி ஆட்சினா சும்மாவா...

பிரதமர் மோடியால் கடந்த 9 ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட சில புதிய அம்சங்களில் விண்வெளிப் பொருளாதார வளர்ச்சி.

Update: 2023-06-09 03:31 GMT

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய சில புதிய கருத்தாக்கங்களில் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளி பொருளாதாரம் ஆகியவை அடங்கும் என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை நினைவுகூரும் ஒரு மாத கால இயக்கத்தின் ஒரு பகுதியாக தில்லியில் நேற்று நடைபெற்ற தொழில் துறையினர் மற்றும் வர்த்தகர்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேந்திர சிங், பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பிரதமரின் அணுகுமுறைகள் சிறப்பு வாய்ந்தவை என்று கூறினார். முறைகேடுகளைத் தடுப்பதன் மூலமும், வணிகம் புரிவதை எளிதாக்குவதன் மூலமும் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அதற்கு புதிய பரிமாணங்களை பிரதமர் அறிமுகப்படுத்தி இருப்பதாக அமைச்சர் கூறினார்.


முக்கியமான இந்த அம்சங்களில் முந்தைய அரசாங்கங்கள் கவனம் செலுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார். இந்தியா உலக அளவில் போட்டியிட வேண்டும் என்றால், உலகளாவிய தரநிலைகளுடன் போட்டியிடும் வகையில் நமது உற்பத்தி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்பே விண்வெளிப் பயணத்தை தொடங்கிவிட்டன என்று கூறிய அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு நமது விண்வெளிப் பயணம் தொடங்கியிருந்தாலும், தற்போது அந்த நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்களைச் செலுத்த, இஸ்ரோ-வின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் இது பெருமைக்குரிய விஷயம் என்றும் அமைச்சர் கூறினார்.


இதுவரை விண்ணில் செலுத்தப்பட்ட 385 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் 353 செயற்கைக்கோள்கள் கடந்த 9 ஆண்டுகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் 174 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஐரோப்பிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் 86 மில்லியன் யூரோ தொகை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News