சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது : இந்தியப் பெண்ணை தேர்வு செய்த அமெரிக்க அரசு.!

சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது : இந்தியப் பெண்ணை தேர்வு செய்த அமெரிக்க அரசு.!

Update: 2021-02-25 17:59 GMT

இந்தியப் பெண்ணிற்கு ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அளித்து அமெரிக்க அரசு கவுரவித்துள்ளது. அமெரிக்காவில் புதியதாக ஆட்சி கட்டிலில் ஏறியுள்ள அதிபர் ஜோ பைடன் நிர்வாக சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது என்ற பெயரில் புதிய விருதை அறிவித்துள்ளது.

இந்த விருதுக்கு இந்தியாவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமை இயக்கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். டெல்லியில் சதார்க் அஞ்சலி பரத்வாஜ் சதார்க் நகரிக் சங்காதன் என்ற அமைப்பை நிறுவியுள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமைக்கான தேசிய பிரச்சார குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

 
இந்த குழு ஊழவை அம்பலப்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் கொண்டு வர வெற்றிகரமாக வாதிட்ட குழுவாகும். இந்த நிலையில் அமெரிக்க அரசு இவருக்கு சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது வழங்க தேர்வு செய்துள்ளது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அஞ்சலி, நாடு முழுவதும் உள்ள மக்கள் மற்றும் குழுக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இந்த விருது என பெருமிதமாக கூறியுள்ளார். 

Similar News