ரூபாய் 600 கோடி மதிப்பிலான 120 கிலோ ஹெராயின் - இஸ்ரோவின் உதவியினால் முக்கிய குற்றவாளி கண்டுபிடிப்பு!

குஜராத்தில் போதைப்பொருள் கடத்தல் காரர் எப்படி குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தார்? என்பதை வெளிக்காட்டும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் புகைப்படம்.

Update: 2022-12-23 02:31 GMT

சமீபத்தில் கூட மத்திய அரசு போதைப்பொருள் கடத்தல் வேலைகளில் ஈடுபடும் மிகப்பெரிய பின்னணியில் இருக்கும் பினாமிகளை தான் முதலில் குறிவைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். அந்த பகுதியில் தற்பொழுது தொழில்நுட்பத்தின் உதவியுடன் கடத்தல் காரரின் தொழில் வளர்ச்சி தற்போது அடையாளம் காணப்பட்டு அவரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போதை பொருள் கடத்தல் காரர் எப்படி பல்வேறு சொத்துக்களை இந்த தொழில் மூலம் பெருக்கிக் கொண்டிருக்கிறார்? என்பதை இஸ்ரோவின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.


மேலும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் புகைப்படங்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சகம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் அவருடைய தொழில் ரகசியம் வெளியில் வந்து இருக்கிறது. குஜராத்தில் துவாரகா மாவட்டத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் இசாராவ் என்பவர் மூன்று ஆண்டுகளில் தனது சொத்தை எப்படி வளர்த்து, ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பங்களாவை கட்டினார்? என்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) வழங்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு வழங்கி இருப்பதன் மூலமாக உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. 



   2021 நவம்பரில் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) ரூ.600 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்ததில் தலைமறைவாக உள்ள இசாராவ் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். இவர் தற்போது பாகிஸ்தான் உள்ள கராச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரைப் பற்றிய எந்த ஒரு விவரமும் தற்போது வரை தெரிய வரவில்லை, ஆனால் இஸ்ரோ அளித்த புகைப்படத்தின் மூலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ராவ் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி சொத்து உருவாக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

Input & Image courtesy: New India News

Tags:    

Similar News