ஆக்கிரமிப்பு காஷ்மீர், ஜம்மு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் ! - அதிரடி காட்டும் ஏர் மார்ஷல் !

ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்று விமானப் படையின் மேற்கு கமாண்ட் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-28 03:25 GMT

ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்று விமானப் படையின் மேற்கு கமாண்ட் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1947 அக்டோபர் 26ம் தேதி ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 27ம் தேதி காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப் படை தரையிறங்கியது. அங்கு அத்துமீறியி நுழைந்திருந்த பாகிஸ்தானியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.


இதனிடையே பட்காமில் நம் விமானப் படை தரையிறங்கியதன் 75ம் ஆண்டு துவக்க விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, விமானப்படை மேற்கு கமாண்ட் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நமது விமானப் படையும், ராணுவமும் இணைந்து கடந்த 1947 அக்டோபர் 27ம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையினால் இப்போதுள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி நமக்கு சொந்தமானது. அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்தப்படாமல் கொடுமை படுத்தி வருகிறது.

எனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஜம்மு காஷ்மீர் முழுவதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இருந்தபோதிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கின்ற திட்டம் தற்போதைக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News