ஜம்மு & காஷ்மீர் :வெற்றி கண்ட பாகிஸ்தான் அணியை கொண்டாடியவர்களை, காட்டிக் கொடுத்தவர்கள் மீது மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகள் !
ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வென்றதை கொண்டாடியவர்களை வழக்கு தொடுத்து காட்டிக் கொடுத்தவர்கள் மீது பகிரங்கமாக மிரட்டல் விடுத்த தீவிரவாதிகள்.
இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் சில மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடினர். அந்தக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை, பொதுமக்கள் அவர்கள் மீது வழக்குத்தொடுத்துள்ளனர் . வழக்குத்தொடுத்தவர்கள் மீது "யுனைட்டட் லிபரேஷன் பிரின்ட் ஜம்மு அண்ட் கஷ்மிர்" என்ற தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
யுனைட்டட் லிபரேஷன் பிரின்ட் ஜம்மு அண்ட் கஷ்மிர் வெளியிட்ட மிரட்டல் அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இந்த இடத்திற்கு சொந்தமில்லாத மாணவர்கள் தொழிலாளர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துக் கொள்கிறோம். எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
எவரெல்லாம் வழக்குத் தொடுத்துள்ளனர் என்று ஆகையால் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் வழக்கு தொடுத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் தவறுமானால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.