பிரதமரின் ஜன்தன் வங்கிக் கணக்குகள் 43.85 கோடியாக அதிகரிப்பு!

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஜன்தன் திட்ட முதலீடு ரூ.1,48,069 கோடி கையிருப்புடன் கணக்குகளின் எண்ணிக்கையும் 43.85 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-11-30 06:29 GMT

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஜன்தன் திட்ட முதலீடு ரூ.1,48,069 கோடி கையிருப்புடன் கணக்குகளின் எண்ணிக்கையும் 43.85 கோடியாக உயர்ந்துள்ளது.

பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் 25.03.2020 அன்று நிலவரப்படி, 38.33 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.1,18,434 கோடி முதலீட்டுக் கையிருப்பாக இருந்தது. தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட பின்னர் 10.11.2021 நிலவரப்படி கணக்குகளின் எண்ணிக்கை 43.85 கோடியாகவும், முதலீட்டுக் கையிருப்பு சுமார் ரூ.1,48,069 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: வங்கிகள் நிர்வாக வாரியம் ஒப்புதல் அளித்துள்ள கொள்கைகளுக்கேற்ப ஜன் தன் கணக்குகள் உட்பட அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும், முதலீட்டிற்கு உரிய வட்டி வழங்கப்டுகிறது. இதனால் ஜன் தன் கணக்குகளுக்கு என்று தனியாக வட்டி வழங்குவது பற்றி அரசிடம் எவ்வித திட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: The Hindu Tamil

Image Courtesy: The Hindu Business Line


Tags:    

Similar News