ஏர்டெல், வோடஃபோனை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய ஜியோ: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வோடஃபோன் மற்றும் ஏர்டெல், ஐடியா நெட்வொர்க்கை தொடர்ந்து ஜியோவும் ப்ரீபெய்ட் மாதக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலைப்பட்டில் அடுத்த மாதம் (டிசம்பர் 1ம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-29 05:52 GMT

வோடஃபோன் மற்றும் ஏர்டெல், ஐடியா நெட்வொர்க்கை தொடர்ந்து ஜியோவும் ப்ரீபெய்ட் மாதக் கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விலைப்பட்டில் அடுத்த மாதம் (டிசம்பர் 1ம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் வோடஃபோன் ஐடியா, ஏர்டெல் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் ப்ரீ பெய்ட் மாத கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தி அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் விலையை உயர்த்தாமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். 

இந்நிலையில், டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் ப்ரீபெய்ட் கட்டணத்தை 20 முதல் 21 சதவீதம் அளவிற்கு மாதக் கட்டணத்தை ஜியோ நிறுவனம் உயர்த்தி நேற்று (நவம்பர் 28) இரவு அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த கட்டணம் வோடஃபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான். இதனால் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

இது பற்றி ஜியோ நிறுவனம் கூறும்போது, டிஜிட்டல் வாழ்க்கையில் ஒவ்வொரு இந்தியரும் மிகவும் வலிமையாக இருக்கின்ற நோக்கில், தொலைத்தொடர்பு துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். எனவே குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான தொலைத் தொடர்பு வசதியை உலகிலேயே ஜியோ மட்டுமே வழங்கி வருகின்றது என குறிப்பிட்டுள்ளது.

Source: Hindu Tamil

Image Courtesy: Mumbai Mirror

Tags:    

Similar News