ஜூலையில் தொடங்கும் இந்தியாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் - UGC தகவல்!

ஜூலை மாதம் தொடங்குகிறது இந்தியாவின் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் வகுப்புகள்.

Update: 2022-10-13 01:29 GMT

இந்தியாவில் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை வருகின்ற ஜூலை மாதம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2022 மற்றும் 23ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தாக்குதலின் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாணவர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் உயர்தரம் வாய்ந்த உலகளாவிய கல்வி வழங்க டிஜிட்டல் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று கூறியிருந்தார். இந்த பல்கலைக்கழகம் பல்வேறு படிப்புகளில் ஆன்லைனில் வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டிகள் மற்றும் என்.ஐ.டிகளில் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு வங்கி கடன் வசதிக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் அகல இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சென்னை ஐ.ஐ.டி மற்றும் டெல்லி பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


அதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பல்கலைக்கழகத்தை வருகின்ற ஜூலை மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் பாடப்பிரிவுகள் திறன் மேம்பாட்டு கவனம் செலுத்தும் விதமாக இருக்கும் என்று பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்து இருக்கிறார். தொடக்கத்திலேயே அதிக எண்ணிக்கையிலான திறன் மேம்பாட்டு சார்ந்த படிப்புகளை தொடங்குவதற்கு ஏற்பாடு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பயிற்சி அளிப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றாலும், அந்த படிப்புகளின் வேலை சார்ந்த தாக இருக்க வேண்டும் என்பது கருத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News