ஆப்கானிஸ்தான் சிறுமி, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு காபூல் நதி நீரை பாட்டிலில் அடைத்து, பிரதமர் மோடிக்கு அனுப்பினார் !

Update: 2021-11-01 06:09 GMT

ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக அந்நாட்டின் காபூல் நதியின்  புனித நீரை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். 

இந்துக்களின் பெரும்கனவான  அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிக்காக நன்கொடைகள் இந்தியாவிலுள்ள பல பகுதிகளிலிருந்து வந்து சேர்ந்து வருகிறது.

இந்தப் புனித ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக உலகம் முழுவதிலும் இருக்கின்ற நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடலில் இருந்து புனித நீர் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓடும் புனித காபூல்  நதியின் நீரை பாட்டிலில் அடைத்து பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் அனுப்பியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தர பிரதேச  மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இது குறித்து பேசினார். பின்னர் காபூல்  நதியின் புனித நீரை இந்திய நாட்டின் புனித நதியான  கங்கையிலும், ராமர் கோயில் கட்டுமானத்தில்  தெளித்துவிட்டார். 

ஆப்கானிஸ்தானையை சேர்ந்த அந்த சிறிய சிறுமியின் செயல் உலகம் முழவதிலுமிருந்து பாராட்டை பெற்றுவருகிறது.

Polimer

Tags:    

Similar News