அங்கே எப்படியோ உஷாராயிட்டாங்க! இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க மசோதா கொண்டு வரும் மாநிலம்!

Karnataka govt to bring bill to free temples from govt control, announces CM Basavaraj Bommai

Update: 2021-12-30 07:08 GMT

இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இந்த முயற்சி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அரங்கேறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத சுதந்திரம் பேண வழிவகுக்கும்.

கர்நாடகா அரசு இந்துக் கோயில்களை சட்டங்கள் மற்றும் விதிகளில் இருந்து விடுவிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார். சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன் இதற்கான மசோதாவை மாநில அரசு கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய சட்டத்தின் கீழ், கோவில்கள் செயல்படுவதற்கு சில விதிமுறைகள் மட்டுமே இருக்கும் என்றும், அவற்றின் மீது அரசின் கட்டுப்பாடு இருக்காது என்றும் கூறினார். கோவில்கள் தங்கள் சொந்த காரியங்களை நிர்வகிக்க அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஹூப்ளியில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதுவரையில் அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கோயில்கள் விடுவிக்கப்படும். இனி கோவில் நிர்வாகத்தினர் தங்கள் வளர்ச்சியை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் புதிய மசோதாவை அடுத்த அமைச்சரவையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். கட்டுப்பாடுகளைத் தவிர, அவர்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிப்பார்கள் என்று கர்நாடக முதல்வர் கூறினார்.

மேலும் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, மதமாற்ற எதிர்ப்பு மசோதா சட்டமாக மாறுவது மட்டுமின்றி, அதை முறையாக அமல்படுத்த சிறப்புப் பணிக்குழுவும் அமைக்கப்படும் என்றார். ஆட்சிக்கு வந்தால் சட்டத்தை ரத்து செய்வோம் என்ற காங்கிரஸின் கூற்றை மறுத்த அவர், "அனைவரும் தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்யும் சட்டம் நிரந்தரமாக இருக்கும்" என்று கூறினார்.




Tags:    

Similar News