BREAKING NEWS : பெங்களூரு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ! ஒரே பரபரப்பு !
கர்நாடக மாநிலம், ஆனேகல் மாவட்டம் அருகே உள்ள அவளஹள்ளி பகுதியில் ரயில்வே கிராஸிங் கேட்டை கடக்க முயன்றபோது டிப்பர் லாரி மீது மைசூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்திற்குள்ளானது.

டிப்பர் லாரி தண்டவாளத்தை பாதி கடந்த பின்னர் ரயில் வருவதை டிரைவர் கவனத்துள்ளார். இதனால் பயந்துபோன டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, கீழே இறங்கி ஓடியுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த ரயில் டிப்பர் லாரி மீது மோதி தரதரவென இழுத்துச்சென்றது. இழுத்துச் செல்லப்பட்ட லாரி மின்கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக ரயிலில் இருந்தவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ரயில் இஞ்சின் அடியில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பற்றி அறிந்த உள்ளூர் மக்கள் ஏராளாமானோர்கள் கூடியுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் பெங்களூரு, ஓசூர் மார்க்கமாக தமிழகம் நோக்கி செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Public Tv