கோலாகலமாக நிறைவு பெற்ற காசி தமிழ் சங்கமம் - புதிய வரலாறு படைக்கப்பட்டது!

பிரம்மாண்ட காசி தமிழ் சங்கம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Update: 2022-12-17 04:07 GMT

காசி தமிழ் சங்கம் நிறைவு விழா இன்று டிசம்பர் 16ஆம் தேதி நடந்து இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையில் உள்ள பாரம்பரிய தொடர்புகளை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக ஒரு மாதம் காலமாக நடைபெற்று இந்த நிகழ்ச்சிகள் பல தரப்பில் உள்ள மக்களாலும் கண்டுக் களிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சுமார் பல்வேறு மக்கள் ரயில் பயணம் மூலமாக காசி சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் இன்று நிறைவு விழா கோலாக்கலமாக அரங்கேறி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்க இருக்கிறார். சென்னை ஐ.ஐ.டி மற்றும் பனராஸ் ஹிந்து பல்கலைக்கழக பங்களிப்புடன் காசி தமிழ் சங்க நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநிலம் காசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றது. காசிக்கும் தமிழகத்திற்கும் இடையில் தொன்மையான நாகரீகம் பல நூற்றாண்டு காலமாக அறிவிப்பையும் மீட்டு உருவாகும் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். டிசம்பர் 16ஆம் தேதி இன்றுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இது சிறப்பு விருந்தினர் விருந்தினராக மத்தியில் உள்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.


மேலும் இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு இருக்கிறது. இது தொடர்பாக மதி அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் தேசபக்தியால் "ஒரே பாரதம் உன்னத பாரதம்" உணர்வை ஒன்றிணைக்கும் விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காசி தமிழ் சங்கம் பெருவிழாவின் நிறைவு இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்பதில் தேச மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News