காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: கோவையில் இருந்து புறப்பட்ட 2வது ரயில்!

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2வது ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது.

Update: 2022-11-21 02:07 GMT

காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பில் வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கி உள்ளது தான் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏற்கனவே முதல் ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டது. அந்த வகையில் தற்போது இரண்டாம் கட்டமான ரயில் கோவையில் இருந்து புறப்பட்டு காசிக்கு பயணம் ஆனது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, வாரணாசியில் நடைபெற்று வருகிறது.


கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது ஒரு மாத நிகழ்ச்சியாக இது நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. வாரணாசியில் அறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரவுகள் விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழகத்திலிருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் தமிழகத்தை சேர்ந்த 2,600 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கோவையில் இருந்து இரண்டாவது ரயில் பயணத்தின் போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காசிக்கு செல்பவர்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இரண்டாம் கட்ட ரயில் பயணத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள், இசை கலைஞர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 83 பயணிகள் கோயம்புத்தூரில் நிலையத்தில் இருந்து காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு பயணம் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: https://tamil.asianetnews.com/politics/a-second-train-left-coimbatore-for-kashi-tamil-sangam-rln1zl

Tags:    

Similar News