போர் விமானங்களை பாதுகாக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம்: DRDO அசத்தல் !
இந்தியாவின் போர் விமானங்களை எதிரிநாட்டு ஏவுகணைகள் தாக்கி அளிக்காத வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த DRDO.
தற்பொழுது இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானங்களை பிறநாட்டு ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த அதிநவீன சாப் என்ற தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக DRDO வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுவது என்னவென்றால், "ஜோத்பூர் மற்றும் புனேயில் உள்ள DRDO ஆய்வகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள நவீன தொழில்நுட்பம், போர் விமானத்தில் பொருத்தும் வகையிலான சாப் கேட்ரிட்ஜ் என்ற கருவி உருவாக்கப்பட்டு உள்ளது.
சாப் கேட்ரிட்ஜ் கருவியில் சிறு அலுமினியம், துத்தநாகம் பூசப்பட்ட நார்த் துகள்கள் லட்சக்கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும். போர் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, இந்தத் துகள்களை வெளியேற்றி காற்றில் பறக்கவிடுவதன் மூலம், தாக்க வரும் எதிரி நாட்டு ஏவுகணையை ரேடார் உதவியுடன் திசையை திருப்பி விட முடியும். அதன் மூலம் போர் விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பான இந்த கருவி தற்போது இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும். முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி உள்ளது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாதுகாப்புத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதில் DRDO மேலும் முன்னேறியது என்று அவர் பாராட்டினார்.
Image courtesy:NDTV news