வேளாண் சட்டங்கள் எதிர்ப்பில் கெஜ்ரிவால் இரட்டை வேடம் : முகத்திரையை கிழித்தது பா.ஜ.க.!

வேளாண் சட்டங்கள் எதிர்ப்பில் கெஜ்ரிவால் இரட்டை வேடம் : முகத்திரையை கிழித்தது பா.ஜ.க.!

Update: 2020-12-16 08:39 GMT

ஆம் ஆத்மி  கட்சி தலைவரான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நரேந்திர மோடி அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகிறது. 

ஆனால் 2017ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது அறிக்கையில் விவசாய சந்தைகளில் தனியார் நுழைய அனுமதி அளிப்பதாகவும், விவசாயிகளை மாநிலத்திற்கு வெளியே விளைபொருட்களை விற்க அனுமதிக்கும் வகையில், ஏபிஎம்சி சட்டத்தை திருத்துவதாகவும் உறுதியளித்தது. 

தற்போது, ​​ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் இந்த ஆண்டு நவம்பரில் டெல்லியில் இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கெஜ்ரிவால் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை மட்டுமல்ல என்றும் மக்கள் விரோதமும் கொண்டவை என்றும் சில முதலாளிகளுக்கு மட்டுமே பயனளிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் கூட நடத்தினார்.

கெஜ்ரிவாலின் இந்த நிலைப்பாடு, பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கான 2017 தேர்தல் அறிக்கையில் அவரது கட்சி வாக்குறுதியளித்ததில் இருந்து முற்றிலும் நேரெதிராக உள்ளது. 

இது குறித்து பா.ஜ.க. வின் ஐடி செல் பொறுப்பாளர் அமித் மால்வியா அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார், அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளின் மத்தியில்  பரபரப்பையும், அச்சத்தையும்  தூண்டி வருகிறார். ஆனால் அவரது போலித்தனத்தைப் பாருங்கள் எனக் கூறி மேற்கண்ட அவரது முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார். . 

முன்னதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து தேர்தல் வாக்குறுதி அளித்த விவகாரம் வெளியான நிலையில், தற்போது ஆம் ஆத்மியும் இதையே செய்து தனது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது, இதை பஞ்சாப், டெல்லி, ஹரியானா விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். 

Similar News