சபரிமலை யாத்திரை செல்லும் அரசு ஊழியர்கள் மீது விரோத போக்கை கையாள்கிறதா கேரள இடது சாரி அரசு ?
கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு கடந்த நவம்பர் 30 அன்று ஒரு இந்து விரோத அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது.அதாவது அரசாங்க ஊழியர்கள் எவராவது சபரிமலை கோயிலுக்கு விரதம் இருந்து புனித யாத்திரை மேற்கொண்டால், அவர்களுது மாத ஊதியத்திலிருந்து சிறு தொகை பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சபரிமலை ஐயப்பனுக்கு நாற்பத்தி ஒருநாள் விரதம் இருந்து, சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து ஐயப்ப பக்தர்கள் ஆண்டுதோறும் ஐயப்பனை தரிசிக்க செல்வர். இப்படி இருக்கையில் கேரளாவை ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசு, வட இந்தியாவை ஆண்ட முகலாய அரசரான ஔரங்கசீப் ஆட்சியில், இந்து மக்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட ஜிஸியா வரி போன்று ஒரு உத்தரவை வெளியிட்டதாக சொல்லப்படுகிறது :
அரசு ஊழியர்களில், ஐயப்ப பக்தர் எவர் ஒருவர் தனது தாடியை சவரம் செய்ய தவறும் பட்சத்தில், அவர்கள் சலுகைகள் பெற தகுதியற்றவர்களாக ஆவர். மேலும் ஐயப்ப பக்தர்கள் தங்களது புனித யாத்திரைக்கு செல்லும் பட்சத்தில் அவர்களது ஊதிய தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும் என்று ஒரு மிகப்பெரிய இடியை கேரள ஐயப்ப பக்தர்கள் மீது சுமத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.
Can you believe this?
— നചികേതസ് (@nach1keta) December 10, 2021
Kerala Govt issued an order to reduce the Salary of Hindus in the Kerala Fire Force if they observe Vrata in preparation to go to Sabarimala!! pic.twitter.com/G8FZSkjBdD
இந்த இந்து விரோத உத்தரவுகளை கேரள கம்யூனிஸ்ட் அரசு கடந்த டிசம்பர் 9ஆம் தேதி திரும்பப் பெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகிவுள்ளதாக சொல்லப்படுகிறது.