கேரளா: நிபா வைரஸ்களுக்கிடையே தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் !

கேரளாவில் தற்பொழுது பரவிவரும் நீபா நிபா வைரஸ் களுக்கு இடையில், புதிதாக 26,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது இதனால் கேரளா மக்கள் பயத்தில் உள்ளார்கள்.

Update: 2021-09-06 12:59 GMT

அண்டை மாநிலமான கேரளாவில் பரவிவரும் நிபா வைரஸ்களுக்கு இடையில், தற்பொழுது தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நிபா வைரஸ் என்ற 12 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அங்கு தற்போது மத்திய குழுவினர் விரைந்து சென்று உள்ளனர். இருப்பினும் அங்கு தொடர்ச்சியான வண்ணம் அங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கேரள மாநிலத்தில் இன்று மட்டும் சுமார் 26,701 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


கேரளாவில் இன்று ஒரே நாளில் 26,701 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கேரள மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளார்கள். கொரோனாவில் இருந்து 28,900 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 74 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். தற்போது கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 39,37,996 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,496 ஆக அதிகரித்துள்ளது. 


தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 791 பேர் உள்ளனர். மேலும் அங்கிருந்த பிற மாநிலங்களுக்கும் வைரஸ்கள் பழகும் வாய்ப்பு அதிகமாக உள்ள காரணத்தினால் தற்போது மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன. 

Input:https://www.indiatvnews.com/news/india/kerala-coronavirus-cases-update-death-toll-covid19-pandemic-latest-news-731861

Image courtesy:indiannews


Tags:    

Similar News