வெள்ளத்தில் மூழ்கிய அரசு பேருந்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் கோழிக்கோடு, பாலக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-10-16 11:56 GMT

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் கோழிக்கோடு, பாலக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டயம் மாவட்டம், புறநகர் பகுதியான பூஞ்சாரில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்து வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. பேருந்துக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும், மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகின்ற அபாயமும் ஏற்பட்டுள்ளது. முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Source: Maalaimalar

Image Courtesy: Ndtv



Tags:    

Similar News