அதிர்ச்சி! நீதிபதி மீதே முத்தலாக் குற்றச்சாட்டு வழக்கு!

அதிர்ச்சி! நீதிபதி மீதே முத்தலாக் குற்றச்சாட்டு வழக்கு!

Update: 2021-02-13 07:16 GMT
இந்தியாவில் முத்தலாக் வழங்கும் நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டாலும் இன்னும் அது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. தற்போது ஒரு அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவமாகக் கேரளாவில் பல்லக்காட்டை சேர்ந்த மூத்த நீதிபதி ஒருவர் மீது முத்தலாக் வழங்கி சட்டவிரோதமாக விவாகரத்து செய்ததாக மனைவி வழக்குப் பதிவு செய்துள்ளார். 

தன் கணவன் நீதிபதி B கலாம் பாஷாகு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனைவி வழக்கு பதிவு செய்துள்ளார். 2018 மார்ச் 1 இல் கலாம் பாஷா முத்தலாக் வழங்கி ஒரு கடிதம் அனுப்பினார் என்று அந்த கடித்ததில் கூறப்பட்டிருந்தது. மேலும் கடிதத்தில் ஒரு பிழை இருப்பதாகக் கூறி மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளார். முத்தலாக் வழங்கிய முறையான தேதி மார்ச் 1 2017 என்று குறிப்பிடப்பட்டது. 
மேலும் விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்தால் மிகப்பெரிய பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கலாம் பாஷா மற்றும் அவரது சகோதரர் அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதில் முக்கியமாகக் குறிப்பிடும் ஒரு விஷயமாக கலாம் பாஷா அவரது சகோதரர் B கேமல் பாஷாவும்  கேரளா உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியாவார். 
இதுபோன்ற தேதி மாற்றம் செய்வது நீதிபதிக்கு எதிரான நடவடிக்கை தடுக்க என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தேதியை மாற்றம் செய்ததாலும் மற்றும் முத்தலாக் தடை சட்டம் அதன் பின்பு அமல்படுத்தப்பட்டதாலும் நீதிபதி மேல் நடவடிக்கை எடுப்பதில் இருந்து தடுத்தது. 
இதுதவிர ஒரு நீதிபதி மேல் நடவடிக்கை எடுப்பது இந்தியாவில் சுலபமான செயல் அல்ல. உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் அனுமதிக்குப் பின்னரே நீதிமன்றத்தில் மற்ற நீதிபதிகள் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். 

முஸ்லீம் பெண்களை இழிவுபடுத்தி மற்றும் முஸ்லீம் ஆண்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக இருப்பதாக கருதி முத்தலாக் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் 2017 ஆகஸ்டில் தடைவிதிக்கப்பட்டது. 

Similar News