கேரளாவில் தீவிரமடையும் கொரோனா: 10 மாவட்டங்களை ஆய்வு செய்யும் மத்திய குழு!

Kerala has been severely affected states in India.

Update: 2021-07-31 12:29 GMT

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில் மத்திய உயர் நிலைக் குழு நேற்று அங்கு சென்று ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் குறைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், கேரளாவில் மட்டும் இன்னும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. மத்திய, அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பாதிப்புகளுக்கு மிக அதிகம். இதன் காரணமாக 6 பேர் கொண்ட மத்திய குழு நேற்று முன்தினம் கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டது. 


கேரளாவில் ஆறு பேர் கொண்ட மத்திய குழுவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக நோய் கட்டுப்பாட்டு தேசிய மையத்தின் இயக்குநர் டாக்டர் N.K. சிங் தலைமையில் இந்த 6 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு நேற்று முன்தினம் கேரளா சென்றடைந்தது. இந்த குழுவினர் தங்கள் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளனர். குறிப்பாக பாதிப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்கள். 


இதுதொடர்பாக ஆலப்புழா மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில சுகாதார துறையினருடன் மத்திய குழுவினர் விவாதித்தனர். தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்ததோடு, மாநிலத்தில் பதிவாகும் பாதிப்பின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளையும் மத்திய குழு பரிந்துரை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Input: https://aninews.in/news/national/general-news/covid-19-centre-team-to-visit-10-districts-in-kerela-starting-today20210731142442/

Image courtesy: ANI news 


Tags:    

Similar News