விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசு: வெங்காய கொள்முதல்!

விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில் கொள்முதல்.

Update: 2023-03-09 01:27 GMT

விவசாயிகள் அவப்பொழுது பயிரிடப்படும் பயிர்கள் சரியான விலை போகாதுதால் அவர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் தற்போது குஜராத்தில் வெங்காய வீழ்ச்சி அடைந்த காரணத்தினால் வெங்காயத்தை பயிரிட்ட விவசாயிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கம் அவற்றை கொள்முதல் செய்ய இருக்கிறது. குஜராத்தில் வெங்காயக் கொள்முதலை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. குஜராத்தில் வெங்காய விலை வீழ்ச்சியடைந்து வருவதையடுத்து விவசாயிகளுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் வெங்காயக் கொள்முதலைத் தொடங்க உள்ளது.


மத்திய அரசின் இம்முடிவால் மாநிலத்தில் வெங்காயச் சந்தையில் ஸ்திரத்தன்மை நிலவும். குஜராத்தில் பாவ்நகர், கொண்டல், போர்பந்தர் ஆகிய இடங்களில் 9.3.2023 முதல் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் வெங்காயத்தைக் கொள்முதல் செய்ய உள்ளது.


விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் இந்நடவடிக்கை அவர்களுக்கு உடனடி நிவாரணமாக இருக்கும். நல்ல விலைப் பெறும் வகையில், ஈரமில்லா, நல்ல தரமான வெங்காயத்தைக் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வருமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். கொள்முதல் செய்ததற்கானப் பணம் ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News