கேலோ இந்தியா திட்டம்: 2,841 பேர் இந்திய வீரர்களாக தேர்வு!

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2841 பேர் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Update: 2022-12-25 06:47 GMT

இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் கேலோ இந்தியா போட்டிகளின் பல்வேறு மாநிலங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் போது இந்தியாவை குறிக்கும் திறமையான வீரர்களில் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய சாதனை வெளிச்சத்திற்கு வருகிறது. 


கேலோ  இந்தியா தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்தும் திறன்கள் அடிப்படையில் வெளிப்படையான தேர்வு செய்யப்படும் வீரர்கள் இந்தியாவிற்காக விளையாடப்படுவார்கள் மேலும் அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். இது குறித்து பாராளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த வழிகாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறுகையில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும்.


வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக பங்களிப்பு வெளிப்படுத்தும் வகையில் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 21 விளையாட்டு பிரிவுகளில் 2,841 வீரர்கள் இந்திய வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamani

Tags:    

Similar News